search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புத்துறை மந்திரி"

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பூட்டான், மியான்மர் நாடுகளின் அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பூட்டான், மியான்மர் நாடுகளையொட்டியுள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நமது தாய்நாட்டை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் காவல் பணியில் இரவு,பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தன்னலம் கருதாத அவர்களின் கடமையை பாராட்டும் வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அங்கு சென்றார். வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.



    எல்லைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு அரண்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். #NirmalaSitharaman #Diwaliwithjawans #ArunachalPradesh
    மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பாதுகாப்புத்துறை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #NirmalaSitharaman
    பாரிஸ் :

    பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் இடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான வருடாந்திர சந்திப்பு நடத்துவதற்கு இருவரும் பரஸ்பரம் ஒப்புதல் வழங்கினர். அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான சந்திப்பில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

    பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி ப்ளோரன்ஸ் பார்லியை, நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்தார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து ப்ளோரன்ஸ் பார்லி மற்றும் நிர்மலா சீதாராமன் தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ரபேல் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றதா எனும் உறுதியான தகவல்கள் ஏதும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

    பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    மேலும், இந்த ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #NirmalaSitharaman
    ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருக்கிறது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSeetharaman
    சென்னை :

    பா.ஜ.க. வணிகர் தாமரை மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். வணிகப்பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் திருமலை, மாநில செயலாளர்கள் சஞ்சீவி, சி.ராஜா, ஏ.டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    மாநாட்டில், தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தை முதல்-அமைச்சர் மீண்டும் செயல்படுத்த வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்கள் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்தது போல, மாநில அரசும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    காங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பா.ஜ.க. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார்.

    காங்கிரஸ் ஆட்சியில் கடன் 3 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்று ஓடியவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கிறது. இதனை 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு மோடி முயற்சி எடுத்து வருகிறார்.

    மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை வணிகர்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் அமையவேண்டும். தமிழகத்திலும் மாறுதல் தேவை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #NirmalaSeetharaman
    ×